Skip to main content
மனதுக்கு இதம் தரும் குட்டிக் குட்டிக் காகித நட்சத்திரங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மனதுக்கு இதம் தரும் குட்டிக் குட்டிக் காகித நட்சத்திரங்கள்

வாசிப்புநேரம் -
Instagramஇல் பகிரப்பட்ட காணொளி ஒன்று....

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவரின் கதையைக் கூறுகிறது.

அதனைப் பார்த்த மில்லியன் கணக்கான இணையவாசிகள் பெண்ணின் மனஉறுதியைப் பாராட்டி வருகின்றனர்.

பெண்ணின் பெயர் சோஃபி புச்சுலு (Sophie Puchulu).

மனநல மருத்துவமனையிலிருக்கும்
வேதனையைப் போக்க அவர் காகித நட்சத்திரங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

நாள்தோறும் 12 முதல் 16 மணி நேரத்துக்கு வண்ணக் காகிதங்களை மடித்துக் குட்டிக் குட்டி நட்சத்திரங்கள் செய்ததாக சோஃபி கூறினார்.

ஒருவாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் தாம் காகித நட்சத்திரங்களைச் செய்வதை நிறுத்தவில்லை என்றார் அவர்.

இப்படி 3 வாரங்களில் செய்த நட்சத்திரங்களை அவர் Instagramமில் பதிவிட்டார்.

ஒவ்வொரு குவளையிலும் சேர்த்துவைத்த காகித நட்சத்திரங்களை அவர் ஒன்றன் பின் ஒன்றாகக் கொட்டுகிறார். அது கடைசியில் மலைபோல் குவிகிறது.

அந்தக் காணொளியை 19 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலர் வலியை மிக அழகான தருணங்களாக மாற்றியிருக்கும் சோஃபியின் திறமையைப் பாராட்டியுள்ளனர்.

"அந்த நட்சத்திரங்கள் உன்னுடைய வலிமையையும் கற்பனை வளத்தையும் காட்டுகின்றன. உற்சாகமளிக்கிறது!" என்று ஒருவர் குறிப்பிட்டார்.

"இதனைப் பார்த்தால் அழுகை வருகிறது. வார்த்தைகளால் சொல்ல முடியாததை இந்த நட்சத்திரங்கள் வருணிக்கின்றன" என்று மற்றொருவர் பதிவிட்டார்.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்