"வீட்டு வேலையும் செய்வோம் காட்டுத்தீயையும் அணைப்போம்!"
வாசிப்புநேரம் -
படம்: HERIBERTUS / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காலையில் வீட்டு வேலை.
பின்னர் தீயணைப்பு வேலை.
இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சுமார் 100 பெண்களுக்கு இது வாடிக்கை.
"Power of Mama" என்பது குழுவின் பெயர்.
தினமும் சுற்றுக்காவலில் ஈடுபடுகின்றனர் பெண்கள்.
காட்டுத்தீயைக் கண்டால் அதை அணைத்திட உதவுகின்றனர்.
2022ஆம் ஆண்டில் குழு உருவாக்கப்பட்டது.
பிள்ளைப் பராமரிப்பு, சமையல், சுத்தம் செய்வது ஆகியவைதான் ஒரு பெண்ணின் வேலை என்று சமூகத்தில் சிலர் புரிந்து வைத்திருக்கின்றனர்.
தீயணைப்பது ஆண்களுக்கான வேலை என்று சிலர் ஏளனமாய்ப் பேசியதாகக் குழு கூறியது.
ஆனால் உதவி செய்வதே தங்கள் நோக்கம் என்பதைப் புரிய வைத்த பிறகு சமூகத்தினர் தங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாக குழுவினர் கூறினர்.
ஆரஞ்சு நிற ஆடை, ரப்பர் காலணிகள், முகக் கவசங்கள் அணிந்து காட்டுத் தீயை அணைக்க மணிக்கணக்காகப் போராடுகின்றனர் பெண்கள்.
தங்களாலும் தீயை அணைக்க முடியும் என்பதை நிரூபித்த பிறகு மக்கள் தங்களைப் பார்க்கும் விதம் மாறுவதாகக் குழுவினர் தெரிவித்தனர்.

ஆதாரம் : AFP