Skip to main content
ஆண்களைவிடப் பெண்களுக்கே வலி அதிகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஆண்களைவிடப் பெண்களுக்கே வலி அதிகம்

வாசிப்புநேரம் -
ஆண்களைவிடப் பெண்களுக்கே வலி அதிகம்

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உடல் முழுவதும் மனிதர்கள் அனுபவிக்கும் வலியில் பெண்களே அதை அதிகம் உணர்வதாக அனைத்துலக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்களோடு ஒப்பிடுகையில் போதுமான நோவுத் தணிப்பு மருந்துகளைப் பெண்கள் பெறும் சாத்தியம் குறைவு என்றும் கூறப்படுகிறது.

118 நாடுகளைச் சேர்ந்த 6 மில்லியனுக்கும் அதிகமானோரிடம் இருந்து ஆய்வுக்காகத் தகவல் திரட்டப்பட்டது.

அதுவே உலகில் இதுவரை வலி பற்றி நடத்தப்பட்டிருக்கும் ஆகப் பெரிய ஆய்வு.

1990க்கும் 2025க்கும் இடையே ஆய்வு நடத்தப்பட்டது.

5 வயதுமுதல் 100 வயதைக் கடந்தவர்களும் ஆய்வில் பங்கேற்றனர்.

பெண்கள் பொதுவாகத் தங்களுக்கு 11 உடற்பாகங்களில் வலி இருப்பதாகக் கூறினர்.

தலை, கழுத்து, தோள்பட்டை, வயிறு, இடுப்பு, முழங்கால் போன்ற உடற்பாகங்கள் அவற்றில் அடங்கும்.

இது ஆண்கள் வழக்கமாக வலியை எதிர்நோக்கும் இடங்களைவிட அதிகம்.

எதனால் வலி அதிகம் ஏற்படலாம் என்பதும் கண்டறியப்பட்டது.

புகைபிடித்தல், உடற்பருமன், குறைந்த குடும்ப வருமானம்.

அவை வலியை அதிகரிக்கலாம் என்றும் ஆய்வு சொல்கிறது.

உலக அளவில் 18.3 விழுக்காட்டு வலி இந்தக் காரணங்களால் ஏற்பட்டிருப்பதை ஆய்வாளர்கள் சுட்டினர்.
ஆதாரம் : Others/The Guardian

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்