Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகின் தலையில் தாங்க முடியாத பிளாஸ்டிக் சுமை

வாசிப்புநேரம் -

ஐக்கிய நாட்டு நிறுவனம் அதிகரிக்கும் பிளாஸ்டிக் குப்பையைக் குறைக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. 

தென் கொரியாவின் பூசான் நகரில் இன்று (25 நவம்பர்) பேச்சு தொடங்குகிறது.  

பிளாஸ்டிக் குப்பையைக் குறைக்க வேண்டும். 

முதலில் பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பது முக்கியம். 

ஆனால் அதற்கு எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அதரவு அளிக்கத் தயங்குகின்றன.

ஈராண்டுக்கு முன்பு பிளாஸ்டிக் பற்றிய பேச்சுவார்த்தைக்கு  175 நாடுகள் இணக்கம் தெரிவித்தன. ஆனால் என்ன செய்வது என்பதில் இன்னமும் குழப்பமும், கருத்து வேறுபாடும் தொடர்வதாக BBC தெரிவித்தது.

பிளாஸ்டிக் குப்பையால் மனிதர்களின் ஆரோக்கியம், பல்லுயிர்ச்சூழல், பருவநிலை போன்றவற்றிற்குக் கேடு விளைவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

2060ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் குப்பையின் அளவு  மூன்று மடங்காகும் என்று அஞ்சப்படுகிறது. 

ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே மறுபயனீடு செய்யப்படுகிறது. 

ஆதாரம் : Others/BBC

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்