Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

1,700 ஆண்டுப் பழைமையான உலகின் ஆக அழகான மொசைக் கல்... இஸ்ரேல் திரும்பியது

வாசிப்புநேரம் -

உலகின் ஆக அழகான மொசைக் இது!

உலகெங்கும் உள்ள பல்வேறு அரும்பொருளகங்களுக்குச் சென்றுவிட்டு, அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு இப்போது திரும்பியுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் டெல் அவிவ் (Tel Aviv) அருகே மொசைக்கை காட்சிப்படுத்த தனிப்பட்ட அரும்பொருளகம் ஒன்றை அமைக்கின்றனர்.

1,700 ஆண்டு காலப் பழைமையான அந்த மொசைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் உருவாக்கப்பட்டுள்ளது.


அதன் நீளம் 17 மீட்டர், அகலம் 9 மீட்டர்.

அதில் கர்ஜிக்கும் சிங்கங்கள், சண்டையிடும் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், டோல்ஃபின்கள், பழங்கள், பூக்கூடைகள், அணையும் கப்பல்கள் என்று பல வண்ணங்களில் படங்கள் அடுக்கப்பட்டுள்ளன.

1996ஆம் ஆண்டு அது கண்டுபிடிக்கப்பட்டது. அது மூன்றாம், நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகையின் தரைக்கல்லாக இருந்திருக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இஸ்ரேலில் தனி அரும்பொருளகம் அமைக்கப்படும் காலம் வரை மொசைக் பிரிக்கப்பட்டு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பல அரும்பொருளகங்களில் வலம் வந்தது.

காலங்கடந்து நிற்கும் இந்த அற்புத மொசைக்கை இஸ்ரேல் அதன் ஆகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாகக் கருதுகிறது.

 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்