Skip to main content
ஒரே இடத்தில் சிக்கிச் சுழலும் உலகின் ஆகப்பெரிய பனிப்பாறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

ஒரே இடத்தில் சிக்கிச் சுழலும் உலகின் ஆகப்பெரிய பனிப்பாறை

வாசிப்புநேரம் -
ஒரே இடத்தில் சிக்கிச் சுழலும் உலகின் ஆகப்பெரிய பனிப்பாறை

(கோப்புப் படம்: REUTERS/Bob Strong)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையில் விசித்திரமான நிகழ்வு.

A23a என்று அழைக்கப்படும் அது பல மாதங்களாகப் பெருங்கடலில் ஒரே இடத்தில் சிக்கிச் சுழன்றுகொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வை 'Taylor Column' என்று கடல் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு A23a பனிப்பாறை அவ்வாறு சுழலும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெருங்கடலின் ஆகச் சக்திவாய்ந்த நீரோட்டத்துடன் அதுவும் பயணம் சென்றுகொண்டிருக்கவேண்டும் என்று BBC தெரிவித்தது.

வழக்கமாகப் பனிப்பாறைகள் உருகிக் காணாமல்போகும். ஆனால் A23a பனிப்பாறை மட்டும் இவ்வளவு காலமாக உருகாமல் இருக்கிறது என்று கடல் ஆய்வாளர் ஒருவர் BBCஇடம் கூறினார்.

பனிப்பாறையின் அளவு இங்கிலாந்தில் உள்ள கிரேட்டர் லண்டன் பகுதியைவிட (Greater London) இரு மடங்கு பெரியது என்று BBC தெரிவித்தது.

1986ஆம் ஆண்டில் A23a பனிப்பாறை அண்டார்டிக் பெருங்கடலின் கரையிலிருந்து உடைந்து விலகியது.

30 ஆண்டுகளாக அது நகரவில்லை.

பின்னர் 2020ஆம் ஆண்டில் அது மீண்டும் மிதந்து மெதுவாக நகர ஆரம்பித்தது.
ஆதாரம் : Others/BBC

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்