உலகின் மிகக் குளிரான நகர் - கண்ணிமை முடியை உறையவைக்கும் குளிர்...

(படம்: Pexels)
சைபீரியாவின் (Siberia) யாகுட்ஸ்க் (Yakutsk) நகரம் உலகின் ஆகக் குளிரான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அங்குள்ள தட்பநிலை பூஜ்யத்துக்குக் கீழே 50 டிகிரி செல்சியஸ் (degrees Celsius) வரை குறைந்துள்ளது.
வழக்கத்துக்கு மாறாக இந்த முறை நீண்ட குளிர் தொடர்கிறது.
மக்கள் கடுங்குளிருக்குப் பழகிவிட்டாலும் ஒதுக்குப்புறமான பகுதியில் வசிப்பவர்கள் அவர்களைப் பாதுகாத்துக்கொள்ள அதிக முயற்சி தேவைப்படுகிறது.
"குளிருடன் போராடி வெல்லமுடியாது. அதைத் தாங்கிக்கொள்ளக்கூடிய உடைகளை உடுத்திச் சமாளிக்கலாம். இல்லையெனில் துன்பம்தான்" என்று அங்கு வசிப்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஒரு மில்லியன் மக்களைக் கொண்ட யாகுட்ஸ்க் நகரம் குளிருக்குப் பேர்போன ஓரிடம்.
ரஷ்யக் குளிர் நடுங்கச்செய்யும் என்றால் யாகுட்ஸ்க் குளிர் உறைய வைக்கும்.
2018-ஆம் ஆண்டுக் குளிரில் சிலரின் கண்ணிமை முடி உறைந்துபோனது.