Skip to main content
மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி... உலகில் முதல்முறையாக!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி... உலகில் முதல்முறையாக!

வாசிப்புநேரம் -
உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி நடைபெற்றுள்ளது.

சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் போட்டி நடந்தது.

China Media Group (CMG) குழுமம் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்ததாக CGTN செய்தி நிறுவனம் கூறியது.

பல சுற்றுகள் நடைபெற்றன.

அதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மனித இயந்திரங்கள் குத்துச் சண்டையில் ஈடுபட்டன.

பார்ப்போரை வியக்கச் செய்யும் அளவுக்கு மனித இயந்திரங்கள் போட்டியிட்டன.

இறுதியில் "AI Strategist" என்கிற இயந்திரமே வெற்றிபெற்றது.

CMG உலக இயந்திரப் போட்டியின் ஓர் அங்கமாக அந்தக் குத்துச் சண்டை போட்டி நடந்ததாக CGTN தெரிவித்தது.

மனித இயந்திரங்களுக்குக் காற்பந்து, கூடைபந்து ஆகிய போட்டிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆதாரம் : Others/CGTN

மேலும் செய்திகள் கட்டுரைகள்