Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகின் முதல் மரத் துணைக்கோளம்... விண்வெளியில்

வாசிப்புநேரம் -
மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் துணைக்கோளம் விண்வெளியில் பாய்ச்சப்பட்டுள்ளது.

அதன் பெயர் 'LignoSat'.

நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் ஆய்வு நடத்த மரத்தால் செய்யப்பட்ட துணைக்கோளம் உகந்ததா என்பதைச் சோதித்துப் பார்க்க LignoSat விண்வெளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

ஜப்பானின் கியோட்டோ(Kyoto) பல்கலைக்கழகம் துணைக்கோளத்தை உருவாக்கியது. Sumitomo Forestry நிறுவனம் துணைக்கோளத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது.

அது அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படும். பின்னர் பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் விண்வெளிக்குள் விடப்படும்.

நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் மரங்களை நட்டு, மரவீடுகளைக் கட்டும் 50 ஆண்டுத் திட்டத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மரத்தால் செய்யப்படும் பொருள்கள் விண்வெளிக்கு உகந்தவை என்பதை நிரூபிக்க ஆய்வாளர்கள் துணைக்கோளத்தை மரப்பலகையை வைத்து உருவாக்க முடிவெடுத்தனர்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்