Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஏறக்குறைய 9,500 நோயாளிகளின் மூளைகளைச் சேகரித்த மருத்துவர்...

வாசிப்புநேரம் -

டென்மார்க்கில் (Denmark) உள்ள ஒடென்ஸ் பல்கலைக்கழகத்தின் (University of Odense) கீழ்த்தளத்தில் பல பேழைகள்...

அவற்றில் ஏறக்குறைய 9,500 மனித மூளைகள்.

1980கள் வரை, 40 ஆண்டுகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சடலங்களிலிருந்து அகற்றப்பட்டவை அவை.

Formalin ரசாயணம் கொண்டு அந்த மூளைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன.

அந்தச் சேகரிப்பு மனநல மருத்துவர் எரிக் ஸ்ட்ரொம்கிரெனுக்குச் (Erik Stromgren) சொந்தமானது.

ஸ்ட்ரொம்கிரெனும் அவருடன் வேலை செய்தவர்களும் மனநலப் பாதிப்புடையவர்களின் மூளைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் மனநல நோய்களுக்குத் தீர்வு காணலாம் என்று நம்பினர்.

டென்மார்க் முழுதும் மனநலக் காப்பகங்களில் மாண்டவர்களின்மீது பிரேதப் பரிசோதனை செய்த பிறகு மூளைகள் சேகரிக்கப்பட்டன.

நோயாளிகளிடமோ அவர்களின் குடும்பத்தினரிடமோ அனுமதி கேட்கப்படவில்லை. 

அக்காலக்கட்டத்தில் நோயாளிகளின் உரிமை குறித்து யாரும் அவ்வளவு அக்கறை கொண்டிருக்கவில்லை.

ஆனால் அதே நேரம், மனநல நோயாளிகளிடமிருந்து மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நம்பிக்கை நிலவியதாகவும் ஆய்வாளர் ஒருவர் கூறினார்.


-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்