Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகின் ஆகப்பெரிய கட்டடம்... கட்டுமானத்தைத் தொடங்கியது சவுதி அரேபியா

வாசிப்புநேரம் -

சவுதி அரேபியா உலகின் ஆகப்பெரிய கட்டடத்தின் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது.

The Mukaab என்கிற அந்த 400 மீட்டர் உயர கனசதுரக் கட்டடம் ரியாத் நகரில் அமையவிருக்கிறது.

கட்டி முடித்த பின் அதுவே உலகின் ஆகப்பெரிய கட்டடமாக இருக்கும் என்று The Hindustan Times செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள Empire State கட்டடத்தைவிட 20 மடங்கு பெரியது.

அதைக் கட்டுவதற்குச் சுமார் 50 பில்லியன் டாலர் செலவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அது New Murabba என்கிற புதிய வட்டாரத்தில் அமைந்திருக்கும் என ஊடகங்கள் தெரிவித்தன.

அங்கு 100,000க்கும் அதிகமான வீடுகளைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The Mukaab கட்டடம் 2030ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமான வேலைகளில் சுமார் 900 ஊழியர்கள் ஈடுபடுவர்.

ஆதாரம் : Others/The Hindustan Times

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்