Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உயிருடன் இருக்கும் உலகின் ஆக வயதான பூனை... வயது 27...

வாசிப்புநேரம் -
உயிருடன் இருக்கும் உலகின் ஆக வயதான பூனை... வயது 27...

(படம்: Cats Protection/Guinness World Records)

கிட்டத்தட்ட 27 வயதாகும் ஃபுலோஸி (Flossie), உயிருடன் இருக்கும் உலகின் ஆக வயதான பூனை எனும் பெருமையைப் பெற்றுள்ளது. கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்திலும் பூனை இடம்பிடித்திருக்கிறது.

பூனைகள் 27 வயது வரை உயிர் வாழ்வது மனிதர்கள் 120 வயது வாழ்வதற்குச் சமம்.

இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் ஃபுலோஸிக்குக் கண் பார்வை மங்கிவிட்டது. செவித்திறன் கிடையாது.

மற்றபடி அது உடல்நலத்துடன் இருப்பதாக CNN செய்தி நிறுவனம் கூறியது.

1995ஆம் ஆண்டிலிருந்து அது பல வீடுகள் மாறியிருக்கிறது.

மருத்துவமனை ஊழியர் ஒருவரால் அது முதலில் தத்தெடுக்கப்பட்டது.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின், அந்த ஊழியர் மாண்டுவிட்டார்.

அதன் பின்னர் அவரின் சகோதரி அந்தப் பூனையைப் பார்த்துக்கொண்டார்.

ஃபுலோஸி அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்தது.

பின்னர் சகோதரியும் உயிரிழந்துவிட்டார்.

அவரின் மகன் அந்தப் பூனையை 3 ஆண்டுகள் வைத்திருந்தார்.

பின்பு அது தொண்டூழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உலகிலேயே ஆக அதிகமாக கிரீம் பஃப் (Crème Puff) என்ற பூனை 38 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது.

அது 2005ஆம் ஆண்டு மாண்டதாக CNN சொன்னது.

ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்