Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கம்பிவட வண்டியில் உலகின் ஆகச் செங்குத்தான பயணம்

வாசிப்புநேரம் -
கம்பிவட வண்டியில் உலகின் ஆகச் செங்குத்தான பயணம்

(படம்: Envato Elements)

கம்பிவட வண்டியில் சில முறை பயணம் செய்யும்போது அது தொடங்குவதும் தெரியாது...முடிவதும் தெரியாது...

சில முறை அது திகில் நிறைந்த பயணமாக இருக்கும்...

அவ்வாறு சுவிட்சர்லந்தில் ஆகச் செங்குத்தான பயணத்தை அளிக்கிறது ஒரு கம்பிவட வண்டி.

பெர்னீஸ் ஆல்ப்ஸ் (Bernese Alps) மலையில் கம்பிவட வண்டியில் 775 மீட்டர் உயரத்துக்குச் செல்லலாம்.

அதைக் கட்டடங்களின் உயரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்... மலேசியாவின் Merdeka 118 கட்டடத்தை விட உயரம்... துபாயின் Burj Khalifa கட்டடத்தை விடக் குறைவு.

கம்பிவட வண்டியில் அந்த உயரத்தை வெறும் 4 நிமிடங்களில் அடைய முடியும் என்று CNN செய்தி நிறுவனம் சொன்னது.

பயணத்தின் இறுதியில் பயணிகள் மலை உச்சியில் நிற்பார்கள்.

அங்கு மலைப் பிரதேசத்தைப் பார்வையிடும் ஓர் உணவகம் காத்திருக்கும்.

கம்பிவட வண்டியின் சேவை இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கியது.

அதற்குக் கின்னஸ் உலகச் சாதனை அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை.
ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்