Skip to main content
"Matcha
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

"Matcha - தேநீராக மட்டும் அருந்துங்கள்!"

வாசிப்புநேரம் -
"Matcha - தேநீராக மட்டும் அருந்துங்கள்!"

படம்: AFP/Frederic J Brown

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உணவகங்களில் பச்சை நிறப் பானங்கள் இருந்தால் அவை பெரும்பாலும் மாட்சா (Matcha) பானமாகத்தான் இருக்கும்...

கிரீன் டீ வகையில் ஒன்றான அது அண்மை ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.

மாட்சா பலவிதமான பானங்களிலும் உணவிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஜப்பானுக்குச் சொந்தமான மாட்சாவை அளவோடு பயன்படுத்தும்படி குரல் எழுந்துள்ளது.

மிதமிஞ்சிய வெப்பத்தால் தேயிலைகளின் இருப்பு குறைந்திருப்பது அதற்குக் காரணம்.

மாட்சா பொட்டலங்களின் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக்
கடைக்காரர்கள் BBC செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

"சில உணவு-பானக் கடைகள் நாளொன்றுக்கு ஒரு கிலோகிராம் மாட்சா கேட்கின்றனர்," என்று ஒருவர் சொன்னார்.

உயர்தரமான மாட்சா சமையலில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது கவலையளிப்பதாக அவர் கூறினார்.

மாட்சா தேநீராக மட்டுமே அருந்தப்படவேண்டும் என்று சிலர் கோரியதாக BBC சொன்னது.

உயர்தரமான மாட்சா தேநீராகவும் தரம் குறைவான மாட்சாவை உணவிலும் மற்ற பானங்களிலும் பயன்படுத்தலாம் என்று அனைத்துலக ஜப்பானியத் தேநீர் அமைப்பு பரிந்துரைத்தது.
ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்