Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல் செய்தியில் மட்டும்

"முயன்று பாருங்கள், பிடித்தால் சேருங்கள்" - சட்டம் பயில விரும்புவோருக்கு சிங்கப்பூரின் செல்வாக்குமிக்க இளம் வழக்கறிஞரின் ஆலோசனை

வாசிப்புநேரம் -

செல்வாக்கு...

அதைப் பெறுவதற்குப் பணியிலோ தொழில்துறையிலோ அதிக அனுபவம் தேவை என்று நம்மில் பலர் நினைப்போம். 

ஆனால் வயதுக்கும் செல்வாக்கு பெறுவதற்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்துள்ளனர் சில இளம் வழக்கறிஞர்கள்.

சிங்கப்பூரில் 40க்குக் குறைவான வயதுடைய ஆகச் செல்வாக்குமிக்க வழக்கறிஞர்கள் 30 பேரை Singapore Business Review பட்டியலிட்டது. 

சிங்கப்பூர்த் தமிழ்ப்பெண்ணான 30 வயது நந்தினி விஜயகுமார் அவர்களில் ஒருவர். 

2016ஆம் ஆண்டு TSMP Law Corporation நிறுவனத்தில் சேர்ந்தார் நந்தினி - அப்போது அவருக்கு வயது 24. கடந்த ஏழு ஆண்டுகளாக அங்கு பணிபுரிகிறார். 

சில பெரிய வழக்குகளில் வாதிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் அவர். Pro Bono எனும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு  இலவசச் சட்டச் சேவையையும் வழங்குகிறார்.

அவருடன் பேசியது 'செய்தி'.

உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோதே வழக்கறிஞராகவேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருந்ததாகவும், அதற்கான முயற்சிகளை எடுக்கத் தொடங்கியதாகவும் சொன்னார் நந்தினி.
சிங்கப்பூர்ச் சட்டக் கல்விநிலையம் வழங்கிய திட்டத்தின் கீழ் 2010இல் தாம் சில சட்ட நிறுவனங்களில் பயில்நிலைப் பயிற்சி (internship) மேற்கொண்டதாகச் சொன்னார் அவர். 
அதில் பெற்ற வழக்காடல் அனுபவங்கள் தனித்துவமானவை; அந்த அனுபவங்கள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று சட்டக்கல்வி பயிலும் ஆர்வத்தை அவருக்குத் தூண்டியதாகச் சொன்னார்.  
சில சமயம் சமூக, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் இரவெல்லாம் வேலை பார்த்ததுண்டு என்கிறார் நந்தினி. 
எனினும் வேலையின் மூலம் பிறருக்கு உதவி செய்யும்போது அது தரும் மனநிறைவே தனி என்கிறார். 
  • "முயன்று பாருங்கள், பிடித்தால் சேருங்கள்"
  • பயில்நிலைப் பயிற்சிகளை மேற்கொண்டு சட்டத்தின் கீழ் எந்தப் பிரிவு உங்களுக்குப் பொருத்தமானது என்பதைக் கண்டறியலாம்.
  • உங்களது குணாதிசயங்களுக்குப் பொருத்தமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். 

"என்னைப் போன்ற இளைய வழக்கறிஞர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தால், அது தொழிலில் மேலும் வளர்ச்சி கண்டு சேவை வழங்கத் தூண்டுதலாக அமையும்"

என்று கூறும் நந்தினி, தமது நிறுவனத்தின் ஆதரவு, வாடிக்கையாளர்களின்  நம்பிக்கை, கணவர்-குடும்பம் தரும் ஊக்கம் - இவையே தமது வளர்ச்சிக்கு உறுதுணை என்றும் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்