Skip to main content
"இளையர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

"இளையர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்" - கனரக லாரி ஓட்டும் இளம் பெண்

வாசிப்புநேரம் -
யார் எந்த வேலையையும் செய்யலாம்; அதற்கு ஆண் பெண் பேதமில்லை என்பதைப் பலர் நிரூபித்து வருகின்றனர்.

அவர்களின் வரிசையில் இணைகிறார் ஜப்பானைச் சேர்ந்த இளம்பெண்.

27 வயது கனா (Kana) எனும் அந்தப் பெண் கடந்த 6 ஆண்டாகக் கனரக லாரிகளை ஓட்டி வருகிறார்.

முதலில் அழகுச் சேவைத் துறையில் வேலை பார்க்க விரும்பிய அவர் பிறகு கனரக லாரி ஓட்டும் துறையைத் தேர்ந்தெடுத்தார். சில நாள்கள் 13 மணி நேர இடைவிடாப் பயணமும் செய்துள்ளார்.

“Track Girl Kanachannel" என்ற YouTube பக்கத்தையும் கனா வைத்துள்ளார். அதில் அவருக்கு 245,000க்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

கனரக வாகனம் ஓட்டும் துறையில் கிடைக்கும் அனுபவங்களை அவர் YouTube செயலில் பகிர்ந்துவருகிறார். இளையர்களை ஊக்குவிப்பது அவரது நோக்கம் என்று South China Morning Post செய்தி குறிப்பிடுகிறது.

பலரும் அவருடைய YouTube காணொளிகளைக் கண்டு வியக்கின்றனர். அவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்