YouTubeஇல் 20% காணொளிகளில் AI மட்டுமே உள்ளது
YouTube/Bandar Apna Dost
YouTube தளத்தின் காணொளிகளில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
குறைவான தரத்துடன் உருவாக்கப்பட்ட அந்தக் காணொளிகள் ஆண்டுக்கு 117 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக The Guardian ஊடகம் சொன்னது.
Kapwing எனும் காணொளி நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்தது.
ஆய்வில் YouTubeஇன் ஆகப் பிரபலமான 15,000 கணக்குகள் ஆராயப்பட்டன.
278 கணக்குகளில் AI காணொளிகள் மட்டுமே இருந்ததாக Kapwing சொன்னது.
அந்தக் கணக்குகளுக்கு மொத்தம் 221 மில்லியன் ரசிகர்கள் இருந்தனர்.
ஸ்பெயினில் 20 மில்லியன்...எகிப்தில் 19 மில்லியன்...அமெரிக்காவில் 14.5 மில்லியன்...என உலகெங்கும் ரசிகர்கள் இருந்தனர்.
AI காணொளிகள் மட்டும் 63 பில்லியன் முறை பார்வையிடப்பட்டன.
அத்தகைய AI காணொளிகள் சமூக ஊடகத்தில் புதுவிதப் போக்கை உருவாக்குவதாக The Guardian சொன்னது.
YouTubeஇன் கருத்தைக் கேட்டபோது...
"AI என்பது ஒரு கருவி மட்டுமே. அதை வைத்துத் தரமான காணொளிகளையோ தரமற்ற காணொளிகளையோ தயாரிக்க முடியும். நாங்கள் தரமான காணொளிகளை வைத்திருக்க முனைகிறோம். எங்களுடைய கொள்கைகளுக்கு எதிரான காணொளிகள் நீக்கப்படும்," என்று YouTube சொன்னது.