36 மாணவர்களுக்கு டான் கா கீ அறநிறுவனத்தின் உபகாரச் சம்பளம்
36 மாணவர்களுக்கு டான் கா கீ அறநிறுவனத்தின் உபகாரச் சம்பளம்
31 Jul 2026 05:27pm
கல்வியில் சிறந்து விளங்கியதோடு சமூகச் சேவையிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட 36 மாணவர்களுக்கு இந்த ஆண்டு டான் கா கீ (Tan Kah Kee) அறநிறுவனத்தின் உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உபகாரச் சம்பளம் தங்களின் கல்விப் பயணத்தைத் தொடர உதவுவதோடு, எதிர்காலத்தில் சமூகத்திற்குப் பங்காற்றவும் ஊக்கமளிக்கும் என்று மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.