Skip to main content
85 ஆண்டுச் சேவை...$250,000 கல்வி நிதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

85 ஆண்டுச் சேவை...$250,000 கல்வி நிதி

85 ஆண்டுச் சேவை...$250,000 கல்வி நிதி

13 Sep 2026 04:54pm

காலங்களைக் கடந்து நிற்கும் அருஞ்சேவைகள், சமூக நலத் திட்டங்கள், கலாசாரத்தையும் தமிழ்மொழியையும் வளர்க்கும் உன்னதப் பணிகள்.

இவற்றைப் போல் எண்ணற்ற முயற்சிகளைச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் (Singapore Kadayanallur Muslim League) கடந்த 85 ஆண்டாகச் செயல்படுத்திவருகிறது.

அவற்றைக் கொண்டாட லீக் உறுப்பினர்கள், அமைச்சர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோர் நேற்று ஒன்றுதிரண்டனர்.

கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக 250,000 வெள்ளி மதிப்பிலான கல்வி நிதி அறிவிக்கப்பட்டது.

சிறப்பாகச் செய்யும் உயர்கல்வி மாணவர்களுக்கு நிதித்திட்டம் இறுதிக்கட்ட உதவியாக விளங்கும்.