சிங்கப்பூரிலுள்ள பெரும்பாலான வங்கிகளின் மின்னிலக்கப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்... வரும் 2 வாரங்களில்
சிங்கப்பூரிலுள்ள பெரும்பாலான வங்கிகளின் மின்னிலக்கப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்... வரும் 2 வாரங்களில்
சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வங்கிகள், மின்னிலக்க வங்கி சேவைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை அடுத்த 2 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் அதனைத் தெரிவித்தது.
அண்மையில் குறுந்தகவல் மூலம் நடத்தப்பட்ட மோசடிகளைத் தொடர்ந்து, மேலும் கடுமையான நடவடிக்கைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவைக்கும் குறுந்தகவல்கள் அல்லது மின்னஞ்சல்களில் சொடுக்கக்கூடிய இணைப்புகளை அகற்றுவதும் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அடங்கும்.
கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புதிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த இயலாத வங்கிகளுக்குச் சற்று அவகாசம் வழங்கப்படும் எனச் சங்கம் தெரிவித்தது.
சில வங்கிகளுக்கு, அது பெரிய அளவிலான மாற்றமாக இருக்கலாம்.
ஆகையால், காலக்கெடுவுக்குள் மாற்றங்களைச் செய்ய இயலாத வங்கிகளை, சிங்கப்பூர் நாணய வாரியம் தண்டிக்காது என்று சங்கம் குறிப்பிட்டது.