எளிமையான வேலைகளுக்கு AI - சிக்கலான பணிகளில் கூடுதல் கவனம்
எளிமையான வேலைகளுக்கு AI - சிக்கலான பணிகளில் கூடுதல் கவனம்
வேலையிடங்களில் மேலும் பலர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் (AI) பயன்படுத்த உந்துதலாய் இருக்கின்றனர் இருவர்.
அவர்களில் ஒருவர் மோகன் சோமு.
Rajah & Tann நிறுவனத்தில் வழக்குகள் பிரிவின் ஆதரவுக் குழுவை வழிநடத்துகிறார்.
மோகனும் அவருடைய குழுவினரும் நீதிமன்ற ஆவணங்களைப் பகுத்துத் தொகுத்துக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர்.
Harvey எனும் மென்பொருள் அவர்களின் வேலையை மேலும் எளிதாக்கியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை நன்கறிந்த மற்றொருவர் செந்தில்நாதன் சம்பத்.
PwC நிறுவனத்தில் வேலை செய்யும் அவர், ChatAssurance எனும் AI கருவியை மேலும் பலர் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்.