Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"கடைக்குச் சென்றுவிட்ட முறுக்கை, கொஞ்சம் வீட்டுக்கு அழைத்து வருவோம்!"

"கடைக்குச் சென்றுவிட்ட முறுக்கை, கொஞ்சம் வீட்டுக்கு அழைத்து வருவோம்!"

28 Oct 2024 10:57pm

தீபாவளிக்கு எத்தனைப் பலகாரங்கள் இருந்தாலும் முறுக்குக்கு ஈடாகாது!

முன்பெல்லாம் அக்கம் பக்க வீடுகளில் உள்ளவர்கள் ஒன்றுகூடி முறுக்கு செய்வது வழக்கமாக இருந்தது.

இன்று காலம் மாறிவிட்டது.

வேலைச்சுமை, நேரமின்மை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் பலரும் முறுக்கைக் கடைகளில் வாங்கத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் இன்னமும் சில குடும்பங்கள் ஒன்றுகூடி முறுக்கு சுடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

அதில் ஒரு குடும்பத்தின் அனுபவங்களை நேரில் கேட்டு அறிந்து வந்தார் 'செய்தி' நிருபர் லொவிஷீனா.