சிலாங்கூரில் தீ - 24 மணி நேரமும் மருத்துவ உதவி
சிலாங்கூரில் தீ - 24 மணி நேரமும் மருத்துவ உதவி
01 Apr 2025 10:12pm
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் தீ.
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை எரிவாயுக் குழாய் கசிந்ததால் தீ மூண்டது.
190 வீடுகள், 148 கார்கள் 12 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகியதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்புத்துறை இயக்குநர் வான் முகமது ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
தீயின் கடுமை தணிந்திருக்கிறது.
முழுமையாக நெருப்பை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
மேலும் விவரங்கள் தருகிறார் 'செய்தி' நிருபர் லொவிஷீனா ராமையா.