பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வைச் சென்ற ஆண்டு எழுதிய மாணவர்களில் 87 விழுக்காட்டினர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுமார் 22,400 மாணவர்கள் தேர்வெழுதினர்.
கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் குறைந்தது ஒரு பாடத்தில்
C6 தர மதிப்பெண்ணைப் பெற்றனர்.
மாணவர்களில் சுமார் 97 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றனர்.
87 விழுக்காட்டினர் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில்
தேர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு பெரிய மாற்றங்கள் இல்லை.