புத்தாக்க முயற்சிகள்மூலம் 159 மில்லியன் வெள்ளி சேமிப்பு
புத்தாக்க முயற்சிகள்மூலம் 159 மில்லியன் வெள்ளி சேமிப்பு
தற்காப்பு அமைச்சிலும் சிங்கப்பூர் ஆயுதப்படையிலும் புத்தாக்க முயற்சிகள்மூலம் கடந்த நிதியாண்டில் 159 மில்லியன் வெள்ளியைச் சேமிக்க முடிந்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் அது 6 மில்லியன் வெள்ளி அதிகம்.
IGNITE புத்தாக்க ஆய்வரங்கம் 2022இல் கலந்துகொண்டு பேசிய தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அதனைத் தெரிவித்தார்.
புத்தாக்கத் தீர்வுகளை அடையாளங்கண்ட அதிகாரிகளுக்கு அவர் விருதுவழங்கினார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தற்காப்பு அமைச்சுக் கட்டடத்தில் நடைபெற்றது.
புத்தாக்கத் தீர்வுகளை அடையாளங்கண்ட 8 பேர் விருதுகளைப் பெற்றனர்.