Skip to main content
சுவா சூ காங்கில் SAFTI City அறிமுகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

சுவா சூ காங்கில் SAFTI City அறிமுகம்

சுவா சூ காங்கில் SAFTI City அறிமுகம்

19 Mar 2025 10:10pm
சிங்கப்பூர் ஆயுதப் படை, அதிக வசதிகள் கொண்ட வளாகத்தில் பயிற்சி செய்யவிருக்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் போன்ற பாவனைப் பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவான வசதிகள் அங்கு இருக்கும்.

ஓல்ட் சுவா சூ காங் ரோட்டில் உள்ள சாஃடி சிட்டி (SAFTI City) அதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு நகரைப் போல் அது அமைந்திருக்கிறது.

உண்மையான சூழலில் பயிற்சி செய்வதுபோன்ற உணர்வை அது படையினருக்கு வழங்கும்.

ஆளில்லா வானூர்தி போன்ற நவீனப் போர்க்களத்துக்கு உகந்த சாதனங்களையும் உத்திகளையும் பயன்படுத்தி வீரர்கள் பயிற்சி செய்வர்.

சாஃப்டி சிட்டியின் முதற்கட்டத்தைத் தொடக்கி வைத்த தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Ng Eng Hen), இந்தப் பயிற்சி வளாகம் நாட்டின் ராணுவத்திற்கு ஒரு முக்கியமான சொத்து என்று குறிப்பிட்டார்.

முதற்கட்டத்தைக் கட்டி முடிக்க சுமார் 200 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது.

இது முழு வசதிக்கும் ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் பாதியளவு.

சாஃப்டி சிட்டியில் காணப்படும் வசதிகளை ஒரு சில நாடுகளில் மட்டுமே காண முடியும் என்று டாக்டர் இங் குறிப்பிட்டார்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்