SICCI - FSIO கூட்டமைப்பின் அடையாளச் சின்னத்தை வெளியிட்டார் அதிபர் ஹலிமா
SICCI - FSIO கூட்டமைப்பின் அடையாளச் சின்னத்தை வெளியிட்டார் அதிபர் ஹலிமா
SICCI எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழிற்சபை கடந்த ஈராண்டுகளாக வர்த்தகங்கள் மீட்சியடையவும் வளர்ச்சிகாணவும் ஆதரவளித்துள்ளதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.
தொழிற்சபையும் சிங்கப்பூர் இந்திய அமைப்புகள் சம்மேளனமும் சேர்ந்து செயல்படும் கூட்டமைப்பின் அடையாளச் சின்னம் இன்று வெளியிடப்பட்டது.
26 அமைப்புகள் சேர்ந்து அமைத்திருக்கும் FSIO எனும் சிங்கப்பூர் இந்திய அமைப்புகளின் சம்மேளனத்துடன் மேற்கொள்ளும் கூட்டுமுயற்சி பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் விவரிக்கிறார் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழிற்சபையின் தலைவர் முனைவர் சந்துரு.