Skip to main content

விளம்பரம்

ஃபேரர் பார்க் விளையாட்டு வரலாற்றை எடுத்துரைக்கப் புதிய முயற்சி

ஃபேரர் பார்க் விளையாட்டு வரலாற்றை எடுத்துரைக்கப் புதிய முயற்சி

04 Jan 2025 10:03pm
ஃபேரர் பார்க் வட்டாரவாசிகள் அதன் விளையாட்டு வரலாற்றை அறிந்துகொள்ளப் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1980களில் உள்ளூர் விளையாட்டுகளுக்கு ஃபேரர் பார்க் வட்டாரம் பெயர் போனது.

அந்த நினைவுகளைப் பாதுகாத்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்ட அவ்வட்டாரத்தில் சுவரோவியங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

15 மாடி உயரங்கொண்ட அவை சிங்கப்பூரின் மிகச்சிறந்த விளையாட்டாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தேசத்துக்காக விளையாடிய விளையாட்டாளர்களை அங்கீகரிக்க, ஃபேரர் பார்க்கின் மையப்பகுதியில் மரபுடைமைக் கூடமும் நிறுவப்பட்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்