ரயில், பேருந்துகளில் தீபாவளி... பயணிகளுக்குப் புதிய அனுபவம்
ரயில், பேருந்துகளில் தீபாவளி... பயணிகளுக்குப் புதிய அனுபவம்
15 Oct 2026 01:20pm
தீபாவளியை முன்னிட்டு ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் ஆகியவை மக்களுடன் கொண்டாட்ட உணர்வைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.
அதற்காக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம்,
இந்திய மரபுடைமை நிலையம், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நிலப் போக்குவரத்து ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
முதன்முறையாகக் கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய நடவடிக்கைகளும் பயணிகளுக்குக் காத்திருக்கின்றன.