வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற திட்டம்
வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற திட்டம்
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தங்கும் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த அமைச்சு கடப்பாடு கொண்டிருப்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஊழியர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வதற்கான முயற்சிகள் தொடரும் என்றார் அவர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆகப் பெரிய ஒரு-நாள் உணவு விநியோகம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் டான் பேசினார்.
சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாள், தொழிலாளர் தினக் கொண்டாட்டம் ஆகியவற்றை ஒட்டி இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்திய உணவகங்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் தீவு முழுதும் 60,000 இலவச உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
சுமார் 30 உணவகங்கள் அதில் பங்கேற்றன.
சிங்கப்பூரர்களின் ஒற்றுமையையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்த இது அர்த்தமுள்ள வழி என்று டாக்டர் டான் பாராட்டினார்.