"விலை ஏற்றம், வாடிக்கையாளர்கள் குறைவு" கடைக்காரர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு
"விலை ஏற்றம், வாடிக்கையாளர்கள் குறைவு" கடைக்காரர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு
அரசாங்கம் அறிவித்திருக்கும் ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தால் சிங்கப்பூரில் உள்ள உணவங்காடிக் கடைகள் அதிகம் பயனடையவிருக்கின்றன.
மத்திய கிழக்கின் நிச்சயமற்ற சூழல் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளது.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்கின்றனர் செய்தியிடம் பேசிய சில கடைக்காரர்கள்.
உணவங்காடி, ஈரச்சந்தைக் கடைக்காரர்கள் வாடகையைச் சமாளிக்க 1,200 வெள்ளி வரை உதவி வழங்கவுள்ளது அரசாங்கம்.
அவர்கள் சமூகத்தில் ஆற்றும் பங்கை அங்கீகரிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுகிறது என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை 6 மாதங்களுக்கு அந்தத் தொகை பிரித்து அளிக்கப்படும்.