Skip to main content
சரியும் இந்திய ரூபாய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சரியும் இந்திய ரூபாய் - சிங்கப்பூர் வர்த்தகர்கள் பாதிக்கப்படுகிறார்களா?

சரியும் இந்திய ரூபாய் - சிங்கப்பூர் வர்த்தகர்கள் பாதிக்கப்படுகிறார்களா?

06 Jun 2025 04:50pm
இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து வருகிறது.

சிங்கப்பூர் வெள்ளியுடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக வீழ்ச்சி கண்டு வந்துள்ளது.

இந்தியாவில் வணிகத் தொடர்புடைய சிங்கப்பூர் வர்த்தகர்களிடையே இந்த மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?

2022 ஜூலை மாதத்தில் ஒரு சிங்கப்பூர் வெள்ளி 51.8 ரூபாயாக இருந்தது.

இந்த மாதம் ஒரு சிங்கப்பூர் வெள்ளி 66 ரூபாயைத் தருகிறது.

இந்த வீழ்ச்சி கடந்த 6 மாதங்களில் அதிக அளவில் காணப்பட்டது.

டிசம்பர் 2024ல் ஒரு வெள்ளிக்கு 62 ரூபாயாக இருந்தது மளமளவெனச் சரிந்தது.

ரூபாயின் வீழ்ச்சி தங்களுக்குச் சாதகமாக அமைகிறது என்று சில வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாகப் பெரிய அளவில் சரக்குகளை இறக்குமதி செய்யும்போது லாப விகிதம் சற்றுக் கூடுகிறது.