Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிறுவனின் வீட்டுப்பாடத்தில் உதவிய காவல்துறை அதிகாரி

வாசிப்புநேரம் -
வீட்டுப்பாடத்தில் குழப்பம்...குடும்பத்தார் உதவலாம்...நண்பர்கள் உதவலாம்...ஆசிரியர்களும் உதவலாம்..

அமெரிக்காவில் 10 வயதுச் சிறுவனுக்குக் காவல்துறை அதிகாரி ஒருவர் உதவினார்!

விஸ்கோன்சின் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனுக்குக் கணக்குப் பாடத்தில் தீராத ஐயம்...

குடும்பத்தாரின் உதவி இல்லை...

யாரிடம் கேட்பது? அவர் அவசர எண்ணுக்கு அழைத்துவிட்டதாக abc News ஊடகம் சொன்னது.

"உண்மையில் அவசரம் இல்லை...ஆனால் எனக்கு வீட்டுப்பாடத்தில் உதவி வேண்டும். மிகவும் சிரமமாக உள்ளது," என்று சிறுவன் கூறினான்.

அவசரச்சேவையைக் கையாளும் ஊழியர் உதவ எண்ணினார்.

சிறுவன் கேள்வி கேட்க..ஊழியர் பதில் தெரியாமல் தவிக்க...

அவர் வட்டாரத்தில் இருக்கும் காவல்துறையினரை அழைத்ததாக abc News கூறியது.

இப்படியும் அழைப்பு வருமா என்றெண்ணிய காவல்துறை அதிகாரி சேஸ் மேசன் (Chase Mason)...அவர் சிறுவனின் வீட்டுக்கருகே இருப்பதை உணர்ந்தார்.

அவர் பின்னர் சிறுவனின் வீட்டுக்குச் சென்றார்.

இருவரும் சேர்ந்து கணக்குப் பாடத்தை முடித்ததாகக் காவல்துறையினர் Facebook தளத்தில் பதிவிட்டனர்.

அவசரமற்ற நிலையில் அவசர எண்ணுக்கு அழைக்கக்கூடாது என்று அதிகாரி சிறுவனுக்கு நினைவூட்டியதாகவும் கூறப்பட்டது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்