வெள்ளத்துக்கு US$100 மில்லியன்
This audio is generated by an AI tool.
இந்தோனேசியாவின் அச்சே (Aceh) மாநிலத்தில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) கூடுதல் நிதியாதரவு வழங்க முடிவெடுத்துள்ளார்.
அதன்படி 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை மாநில அரசாங்கத்திடம் வழங்கப்படும்.
அந்தப் பகுதியில் துப்புரவுப் பணிகளில் உதவ மேலும் 15,000 ராணுவ, காவல்துறை அதிகாரிகளை அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அச்சே மாநிலத்தில் சென்ற ஆண்டு இறுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.
அங்குள்ள 5 கிராமங்களில் இன்னமும் மின்சாரம் இல்லை.
14 வட்டாரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வெள்ளத்தால் 3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
1,000க்கும் அதிகமானோர் மாண்டனர், 7,000க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
150 பேரை இன்னமும் காணவில்லை.
அந்தப் பகுதியில் வானிலை மேம்பட்டதுபோல் தெரியவில்லை.
அவ்வப்போது மழைபெய்து திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
தேடல் மீட்புப் பணிகளில் அதனால் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.