Skip to main content
தமிழ்நாட்டு ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தமிழ்நாட்டு ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

வாசிப்புநேரம் -
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஆலயத்தில் 103 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் ஒரு மண்பானையில் கிடந்ததாக NDTV ஊடகம் சொன்னது.

கோவில் மூன்றாம் ராஜராஜ சோழன் வாழ்ந்த 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

அண்மையில் கோயிலில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்தபோது மண்பானை கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் இருந்த நாணயங்களைக் கண்ட ஆலய நிர்வாகம் காவல்துறையினரிடம் தகவல் அளித்தது.

நாணயங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை...அவை ஏன் மண்பானையில் வைக்கப்பட்டன என்பதை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்