ஆசிய விளையாட்டுகளில் 11 வயதுச் சிறுவனுக்குத் தங்கம்
AP Photo/Dita Alangkara
This audio is generated by an AI tool.
ஆசிய விளையாட்டுகளில் 11 வயதுச் சிறுவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த யுக்கி குரிஹாரா (Yuki Kurihara) போட்டியின் ஆக இளைய வீரர் என்று நம்பப்படுகிறது.
அவர் இணைய விளையாட்டில் பெரியவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றார்.
"வென்றதில் மகிழ்ச்சி. தங்கப் பதக்கம் பார்க்க மிகவும் அழகாகவும் பளபளப்பாகவும் உள்ளது," என்றார் அவர்.
குரிஹாரா 7 வயதிலிருந்து இணைய விளையாட்டில் ஈடுபடுகிறார்.
அவர் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிபுணத்துவ விளையாட்டாளராக உருவெடுத்தார்.
"படித்துக்கொண்டே நிபுணத்துவ விளையாட்டில் ஈடுபடுவது சிரமம். ஆனால் எனக்குப் பிடித்திருக்கிறது," என்றார் அவர்.
இதற்கு முன்னர் 2023இல் நடைபெற்ற ஆசியான் விளையாட்டுகளில் 13 வயது இளையர் தங்கம் வென்றார்.
சீனாவைச் சேர்ந்த குய் சன்சி (Cui Chenxi) தெரு சறுக்குப்பலகை போட்டியில் வெற்றி பெற்றார்.