Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

11.11 என்ற ஒற்றையர் தினம் - அன்றும் இன்றும்... என்ன வித்தியாசம்?

இன்று Singles' Day என்றழைக்கப்படும் ஒற்றையர் தினம்...

வாசிப்புநேரம் -

இன்று Singles' Day என்றழைக்கப்படும் ஒற்றையர் தினம்...

ஒற்றையர் தினம் சீனாவில் தொடங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா?

11.11 என்ற தேதியன்று ஒன்று என்ற எண் நான்கு முறை ஒன்றின் பின் ஒன்றாகத் தோன்றுகிறது. அதைப் பார்ப்பதற்குத் தூரத்தில் நால்வர் தனியே நிற்பது போல் இருக்கிறதல்லவா!

ஒன்று என்ற எண்ணின் உருவடிவம், சீன மொழியில் திருமணமாகாத ஆடவர் என்ற பொருளைக் கொண்ட சொல்லுடன் உருவத்தில் நெருக்கமாக உள்ளது.

1993ஆம் ஆண்டில் முதன்முதலாக ஒற்றையர் தினம் சீனாவில் அனுசரிக்கப்பட்டது. குறிப்பாக, ஒற்றையருக்கான மலிவுவிற்பனைகள் அந்நாளன்று இடம்பெறும்.

இப்போதோ, இந்நாளைப் பல நாடுகள் அனுசரிக்கின்றன. ஒற்றையர், திருமணமானவர் எனப் பலரும் இதனை வரவேற்கின்றனர்.

பெரிய வர்த்தகங்கள் இந்த நாளைச் சாதகமாகப் பயன்படுத்தி அவற்றின் விற்பனைகளை வானுயரத்துக்கு அதிகரிக்கின்றன.

அன்றிலிருந்து இன்றுவரை, ஒற்றையர் தினம் பல வழிகளில் மாறியுள்ளது... அவற்றில் சில முக்கிய மாற்றங்கள் என்னென்ன? கண்டறிந்தது, செய்தி...

  • நேரடியாகக் கடைக்குச் சென்று பொருள் வாங்குதல்

ஒற்றையர் தினம் தொடங்கிய சமயத்தில் இணையம் பிரபலமாகப் பயன்படுத்தப்படவில்லை. அந்த நேரத்தில் மக்கள் கடைகளுக்கு நேரே சென்று பொருள் வாங்கினர்.

இப்போதோ, பலதரப்பட்ட இணைய விற்பனைத் தளங்கள் மலிவு விற்பனைகளை நடத்துகின்றன. கையில் திறன்பேசியை வைத்துக்கொண்டு பலவற்றை வாங்கலாம்.

  • கட்டண முறை - செலவழிக்கப்படும் பணம்

முன்னைய காலத்தில் பெரும்பாலானோர், கடைகளில் ரொக்கப் பணம் கொடுத்துப் பொருள்களைப் பெற்றனர்.

சராசரி தனிநபர்கள் அதிக அளவில் ரொக்கத்தை வெளியே கொண்டுசெல்லும் வழக்கம் அப்போது இல்லை. அதனால் அவர்கள் குறைந்த அளவில் பொருள்களை வாங்கினர்.

இப்போதோ, இணைய விற்பனைத் தளங்களில் பல்வேறு கட்டண முறைகள் தோன்றியுள்ளன.

உதாரணத்துக்குச் சில தளங்களில் பொருள்களை முதலில் பெற்றுவிட்டுப் பின்னர் மாதாமாதம் அதன் விலையில் ஒரு சிறிய தொகையைக் கட்டவேண்டும்.

அது போன்ற ஏற்பாடுகளால் மக்கள் அதிகம் பணம் செலவழிக்கலாம்.

  • நேரம்

ஒற்றையர் தினம் தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில், மக்கள் வீட்டிலிருந்து கடைக்குக் கடை செல்ல வேண்டிய சூழல் இருந்தது.

நேரத்தை வீணாக்க விரும்பாதவர்கள் மலிவு விற்பனைகளில் கலந்துகொள்ளாமல் இருந்தனர்.

இப்போது, இணையத்தில் பொருள்களை எளிதில் வாங்கலாம். ஆனால் இதனால் நேரச் செலவு குறைவதில்லை! பலரும் நீண்டநேரமாக ஒவ்வொரு கடையையும் பொருளையும் அணுக்கமாகக் கவனித்த பின்பே வாங்குகின்றனர்.

சிலர் பல மணிநேரம் அவ்வாறு செய்கின்றனர் என்று கூறியிருக்கிறார்கள்.

  • ஒற்றையர் தினம் அனுசரிக்கப்படும் நாடுகள்

முன்பு சீனாவில் மட்டுமே அனுசரிக்கப்பட்ட 11 நவம்பர், இப்போது அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

சென்ற ஆண்டின் 11.11 நாளன்று Alibaba நிறுவனம் 74.1 பில்லியன் டாலர் அளவில் விற்பனை செய்தது!

ஒப்புநோக்க, சென்ற ஆண்டு அமெரிக்காவில் அதுபோன்ற Black Friday, Prime Day, Cyber Monday போன்ற மற்ற மலிவு விற்பனை நாள்களன்று 10.84 பில்லியன் டாலர் வரை மட்டுமே ஈட்டப்பட்டது.

எனவே, ஒற்றையர் தினத்தன்று பலரும் விரும்பியதை மலிவான விலைக்குப் பெறலாம். இந்நாளன்று, நீங்கள் வாங்க நினைப்பது என்ன? 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்