ஒரே நேரத்தில் 1,200 ஜோடிகள் திருமணம்
வாசிப்புநேரம் -
(படம்: ALFREDO ESTRELLA / AFP)
14 பிப்ரவரி என்றால் அன்பர்கள் ரோஜா மலரைக் கொடுப்பது, பரிசுகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கம்.
ஆனால் மெக்சிகோவில் (Mexico) ஆண்டுதோறும் அன்பர்கள் தினத்தில் Nezahualcoyotl நகரில் பெரிய அளவில் திருமண நிகழ்வு நடைபெறுகிறது.
அந்தக் கலாசாரத்தைப் பின்பற்றி இந்த ஆண்டு Nezahualcoyotl நகரில் ஒரே நேரத்தில் 1,200 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தப்பட்டது.
பல தலைமுறையைச் சேர்ந்த ஜோடிகள் திருமணம் புரிந்துகொண்டனர்.
சிலர் திருமணச் செலவைக் கட்டுப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். நெடுநாள் காதலித்த வேறு சிலரோ திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
இன்னும் சிலர் கூட்டமாகத் திருமணம் செய்துகொள்ளும் இந்தக் கலாசாரம் வித்தியாசமான அனுபவமாக இருப்பதால் அதில் கலந்துகொண்டு திருமணம் முடித்ததாக AFP செய்தியிடம் தெரிவித்தனர்.
நிகழ்வின்போது திருமணம் புரிந்து நீண்ட காலமான 3 தம்பதியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆதாரம் : AFP