Skip to main content
புதுடில்லி ரயில் நிலைய நெரிசல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதுடில்லி ரயில் நிலைய நெரிசல் - கும்ப மேளாவுக்குச் செல்லவிருந்த 15 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
புதுடில்லி ரயில் நிலைய நெரிசல் - கும்ப மேளாவுக்குச் செல்லவிருந்த 15 பேர் மரணம்

(கோப்புப் படம்: Niharika KULKARNI / AFP)

இந்தியத் தலைநகர் புதுடில்லியின் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 15 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் மூவர் பிள்ளைகள், 10 பேர் பெண்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மேலும் 11 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

நேற்று மாலை (15 பிப்ரவரி) உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவுக்குச் செல்ல மக்கள் ரயில்களில் ஏற முயன்றபோது விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தச் சம்பவம் வருத்தமளிப்பதாக இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி X தளத்தில் பதிவிட்டார்.

மக்களைப் பிரயாக்ராஜ் நகருக்குக் கொண்டுசேர்க்கச் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

சென்ற மாதம் கும்ப மேளாவில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் மடிந்தனர்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்