Skip to main content
பிரிட்டனில் கத்திக்குத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டனில் கத்திக்குத்து - 15 வயதுச் சிறுவன் மரணம்; 15 வயதுச் சிறுவன் கைது

வாசிப்புநேரம் -
பிரிட்டனில் கத்திக்குத்து - 15 வயதுச் சிறுவன் மரணம்; 15 வயதுச் சிறுவன் கைது

(படம்: Envato Elements)

பிரிட்டனின் ஷெஃபீல்டு (Sheffield) பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 15 வயதுச் சிறுவன் மாண்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடுமையாகக் காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மாண்டதாகக் காவல்துறை கூறியது.

சிறுவனைக் கொலை செய்த சந்தேகத்தில் மற்றொரு 15 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டதாகவும் AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

சம்பவம் குறித்த அறிக்கையில் பாதிக்கப்பட்ட குடும்பம், பள்ளியைச் சேர்ந்தோருடன் நாட்டு மக்களும் சிறுவனின் மரணத்தை எண்ணி வருந்துவதாகப் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) கூறினார்.

அதிகரித்து வரும் கத்திக்குத்துச் சம்பவங்கள் "தேசிய நேருக்கடி"யாகி உள்ளன என்று அவர் முன்னதாகக் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் கத்திக்குத்துச் சம்பவங்களைத் தடுக்கக் கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் கடுமையான சட்டங்கள் நடப்புக்கு வந்தன.
 
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்