Skip to main content
எரிந்துபோன ஜொகூர் வீட்டில் 6 சடலங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எரிந்துபோன ஜொகூர் வீட்டில் 6 சடலங்கள் - 2 சகோதரர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
ஜொகூரில் எரிந்துபோன வீட்டில் 6 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இரு சகோதரர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கங்கார் புலாயின் பனை எண்ணெய்த் தோட்டத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

மாண்டுபோன 6 பேரில் ஐவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் மூவர் 2 வயதுக்கும் 9 வயதுக்கும் இடைப்பட்ட சிறு பிள்ளைகள்.

32 வயது R அரசன் (Arasan), 36 வயது R உதேஸ் (Utes) ஆகிய இருவர் மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இருவரும் 28 வயது V தமிழ் செல்வனைச் (Thamil Selvan) சென்ற ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அந்த வீட்டில் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

6 பேரின் எரிந்த உடற்பகுதிகளும் சென்ற மாதம் கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்களில் ஒருவர் 35 வயதுப் பெண். இன்னொருவர் 19 வயதுப் பெண். 9 வயதுச் சிறுமி, 5 வயதுச் சிறுமி, 2 வயதுச் சிறுவனும் அதில் அடங்குவர்.

மாண்டோரில் ஒருவரின் கணவர், தமது மனைவியையும் பிள்ளைகளையும் காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

அவர்களைத் தேடும்போது ஆடவர் அந்த உடற்பகுதிகளைக் கண்டுபிடித்தார்.

வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் தொடங்கும்.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சகோதரர்களுக்கு மரண தண்டனை அல்லது 40 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அதோடு அதிகபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்