கிலான்தான், மலேசியா: தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கிலான்தான் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஆக மோசமாக வெள்ளம் இதுவே.
இவ்வெள்ளத்தால் 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 1000க்கு மேற்பட்டோர் தங்கள் வீடுகள் மூழ்கி போய் இரவின் போது பள்ளிக்கூடம் ஒன்றில் உறங்க வேண்டியுள்ளது.
தற்போது கிலாந்தானினுள்ள பாசிர் மாஸ் போன்ற இடங்களில் வெள்ளத்தின் வேகம் சற்று தணிந்துள்ளது. பள்ளிக்கூடத்தில் அடைக்கலம் புகுந்த மக்கள் மெல்ல மெல்ல தங்களது இல்லங்களுக்குச் செல்கின்றனர். இருப்பினும் நாளடைவில் வெள்ளத்தின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புண்டு என்கின்றனர் அதிகாரிகள்.