மலேசிய ஆகாயப்படையில் ஒழுக்கக் கேடு - 20 அதிகாரிகள் மீது நடவடிக்கை
This audio is generated by an AI tool.
அரச மலேசிய ஆகாயப்படை அதன் 20 அதிகாரிகள் ஒழுக்கக் கேடான நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
சமூக ஊடகத்தில் வெளியான காணொளிகளைத் தொடர்ந்து விசாரணை நடத்தும்படி கடந்த 5ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச மலேசிய ஆகாயப்படைத் தலைவர் முகமது நொராஸ்லான் அரிஸ் (Muhammad Norazlan Aris) கூறினார்.
எந்த சமரசமும் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
அரச மலேசிய ஆகாயப்படையின் தலைமைத்துவம் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகத் திரு நொராஸ்லான் சொன்னார்.
மலேசியாவின் ராணுவ முகாம்களில் கேளிக்கை நடவடிக்கைகளைக் காட்டுவது போன்ற காணொளிகள் இணையத்தில் வெளிவந்தகாக, முன்னதாக Free Malaysia Today செய்தித்தளம் கூறியிருந்தது.