Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பூமியின் ஆக வெப்பமான ஆண்டு 2024

வாசிப்புநேரம் -

பூமியின் ஆக வெப்பமான ஆண்டாக 2024 உருவெடுத்துள்ளது.

தொழிலியல் புரட்சி ஏற்பட்ட காலத்துடன் ஒப்புநோக்க உலகளாவிய வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக எறியது.

அவ்வாறு முதல்முறையாக நேர்ந்துள்ளதாக உலகின் சில வானிலை ஆய்வகங்கள் கூறியுள்ளன.

வெப்பம் 1.53 டிகிரி செல்சியஸ் முதல் 1.6 டிகிரி செல்சியஸ் வரை கூடியதாக ஐரோப்பா, ஜப்பான், பிரிட்டன் ஆகியவற்றின் வானிலை ஆய்வகங்கள் கூறின.

பூமியின் வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருந்தால் பெரும் பேரிடர்களைத் தவிர்க்கமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

20 ஆண்டுகள் அடிப்படையில் சராசரி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ்க்குள் வைத்திருக்க உலக நாடுகள் 2015இல் இணங்கின.

கடந்த ஓராண்டு மட்டும் அதை மிஞ்சிவிட்டதை எண்ணி ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சராசரி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறினர்.

ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்