புதுடில்லியில் தீ - 21 பேர் மரணம்
படம்: REUTERS/Adnan Abidi
புதுடில்லியின் மால்வியா பகுதியிலிருக்கும் ஹோட்டலில் தீ மூண்டதில் குறைந்தது 21 பேர் மாண்டனர்.
மாண்டோரில் பலர் இந்தியாவின் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்ததாக BBC சொல்கிறது.
அருகிலிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரும் அவர்களுடைய குடும்பத்தினரும் பொதுவாக அந்த ஹோட்டலில் தங்குவார்கள்.
40 பேருக்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
தீ மூண்டபோது ஹோட்டலுக்குள் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை.
தீக்கான காரணமும் தெரியவில்லை.
தீ அணைக்கப்பட்டுவிட்டது. மீட்புப் பணி தொடர்கிறது.