Skip to main content
சீனாவில் நிலச்சரிவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீனாவில் நிலச்சரிவு - 21 பேர் உயிரிழந்த சோகம்

வாசிப்புநேரம் -
சீனாவில் நிலச்சரிவு - 21 பேர் உயிரிழந்த சோகம்

CN-STR via AFP

வெளியீடு : 08 Jul 2026 11:08AM புதுப்பிப்பு : 08 Jul 2026 12:46PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவின் கான்சு (Gansu) வட்டாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் மாண்டனர்.

நேற்று (7 ஜூலை) (Dangchang)தாங்சாங் பகுதியிலுள்ள ரென்சாங் (Rencang) கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

புதையுண்ட 33 பேரை மீட்கும் பணியில் அதிகாரிகள் இறங்கினர்.

சிலரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

மீட்புப் பணி நிறைவடைததாக அதிகாரிகள் கூறினர்.

நேற்று சீனாவின் மத்திய, தென் பகுதிகளை கடுமையான புயலும் தாக்கியது.

அதில் 17 பேர் மாண்டனர்.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

சீன அதிபர் சி சின்பிங் மக்களுக்கு உதவ ஆன அனைத்தையும் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

பேரிடர் நிவாரணத்துக்காக அரசாங்கம் 24 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

குவாங்சி மாநிலத்தில் 50,000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

மீட்புப் பணிகளில் சுமார் 28,500 அதிகாரிகள் உதவுகின்றனர்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்