மெக்சிகோவில் 3 வெளிநாட்டினர் கொலை: மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
வாசிப்புநேரம் -
படம்: Karen Castaneda / AP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மெக்சிகோவில் இரண்டு ஆஸ்திரேலியச் சகோதரர்களையும் அவர்களுடைய அமெரிக்க நண்பரையும் கொன்ற மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் காரணமின்றிக் கொல்லப்பட்ட அந்தச் சம்பவத்திற்கு உலக அளவில் கண்டனம் எழுந்தது.
30 வயது ஜேக் ராபின்சன் (Jake Robinson), 33 வயது காலம் ராபின்சன் (Callum Robinson), நண்பர் 30 வயது கார்ட்டர் ரோட் (Carter Rhoad) ஆகியோர் 2024இல் கொல்லப்பட்டனர்.
அவர்கள் மெக்சிகோவின் பசிபிக் கடற்கரைக்கு அலையாடச் சென்றிருந்தனர்.
2024 ஏப்ரல் 27ஆம் தேதி குற்றவாளிகள் அவர்களிடம் கொள்ளைடியக்க முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது.
சில நாள்களுக்குப் பிறகு மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் தலையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தன.
குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனை குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஒவ்வொருவருக்கும் 210 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்க அரசாங்கத்தரப்பு கோரியுள்ளது.
ஒரு மாதம் நீடித்த விசாரணைக்காக ராபின்சன் சகோதரர்களின் பெற்றோர் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்றிருந்தனர்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் சகோதரர்களின் தாய் கண்ணீர் விட்டார்.
எந்தத் தீர்ப்பும் தங்கள் மகன்களை மீட்டுத்தராது என்று குடும்பம் கதறியது.

ஆதாரம் : AFP