Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: கரையொதுங்கிய 32 திமிங்கிலங்கள் காப்பாற்றப்பட்டன; 200க்கும் மேற்பட்டவை மாண்டன

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா (Tasmania) மாநிலத்தில் கரையொதுங்கிய  பைலட் வகைத் திமிங்கிலங்களில் (pilot whales) 32 திமிங்கிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 

இவ்வாரம் மட்டும் அந்த வட்டாரத்தில் சுமார் 200 திமிங்கிலங்கள் மாண்டன. 

திங்கட்கிழமையன்று (19 செப்டம்பர்) கண்டுபிடிக்கப்பட்ட கரையொதுங்கிய திமிங்கிலங்களில் பாதி உயிருடன் இருந்ததாக டாஸ்மேனிய வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆனால் நாள்கள் செல்லச்செல்ல உயிர்பிழைத்த திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே சென்றது. இன்று காலை அவற்றில் 35 மட்டுமே உயிருடன் இருந்தன. 

உயிருடன் இருந்த திமிங்கிலங்களில் 32 மீட்டெடுக்கப்பட்டுக் கடலில் விடுவிக்கப்பட்டன. 

கடலலைச் சூழலின் காரணமாக எஞ்சிய 3 திமிங்கிலங்களை விடுவிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்