360 கிலோ peanut butter தடவுகிறார்கள்...தரையில்
AP Photo/Mouneb Taim
This audio is generated by an AI tool.
peanut butter எனும் வேர்க்கடலை வெண்ணெய்க் கலவை பலருக்கும் பிடித்தமான உணவு.
ரொட்டியில் அதைத் தடவிச் சாப்பிடுவது வழக்கம்.
நெதர்லந்தில் சுமார் 360 கிலோகிராம் கலவையைச் சிலர் தரையில் தடவியுள்ளனர்.
15,000 ரொட்டிகளில் தடவிச் சாப்பிடக்கூடிய அளவு அது.
காலஞ்சென்ற கலைஞர் விம் T ஷிப்பர்ஸை (Wim T. Schippers) நினைவுகூரும் விதமாக அவ்வாறு செய்வதாக ஓர் அரும்பொருளகம் கூறுகிறது.
83 வயது ஷிப்பர்ஸ் கடந்த மாதம் காலமானார்.
Peanut butter வேர்க்கடலை வெண்ணெய்க் கலவையால் நிறைந்த தரை அவரின் பிரபலமான படைப்புகளில் ஒன்று.
Pindakaasvloer அதாவது 'Peanut butter தரை' என்பது படைப்பின் பெயர்.
வித்தியாசமான யோசனைகளுக்கு வடிவம் கொடுக்கும் ஷிப்பர்ஸ் கண்ணாடி, உப்பு போன்றவற்றையும் தரையில் நிரப்பியதுண்டு.
Museum Boijmans Van Beuningen என்ற அரும்பொருளகம் இப்போது ரோட்டர்டாம் (Rotterdam) நகரில் ஷிப்பர்ஸின் Peanut butter தரையை மீண்டும் படைத்திருக்கிறது.
2 மாதம் வரை அது காட்சிக்கு வைக்கப்படும்.