Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் வெள்ளம் புகுந்த நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து 4 சடலங்கள் மீட்பு

வாசிப்புநேரம் -
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

90 மீட்டர் ஆழம்கொண்ட சுரங்கத்தில் கடந்த திங்கள்கிழமை (6 ஜனவரி) வெள்ளம் புகுந்தது. குறைந்தது 9 பேர் சிக்கிக்கொண்டதாக AFP செய்தி கூறுகிறது.

சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க முக்குளிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

முதல் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை (7 ஜனவரி) மீட்கப்பட்டது.

மேலும் 3 சடலங்கள் இன்று மீட்கப்பட்டன.

சுரங்கத்தினுள் குழாய்களைப் போட்டு வெள்ள நீரை உறிஞ்சி வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையடுத்து நீர் மெல்ல வடியத் தொடங்கியுள்ளது.

அச்சுரங்கம் 12 ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டுவிட்டதாக மாநில முதலமைச்சர் கூறியுள்ளார். அதிலிருந்தவர்கள் சட்டவிரோதமாக அங்கு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
 
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்